டி-20 கிரிக்கெட்: ஐ.சி.சி., 2024ன் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு
புதுடில்லி:கடந்த 2024ம் ஆண்டின் ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 12 மாதங்களில் 18 ஆட்டங்களில் 36 விக்கெட் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அர்ஷ்தீப் இந்த விருதை பெற்றார்.
2024ம் ஆண்டு இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றியில் அர்ஷ்தீப் முக்கிய பங்கு வகித்தார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் இந்தியாவின் பந்துவீச்சுத் தாக்குதலை வழிநடத்தி வருகிறார்.
2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்டின் சிறந்த அணியிலும் அவர் இடம் பெற்றார்.மேலும் ஐ.பி.எல்., ஏலத்தில் குறிப்பிடத்தக்க ஏலத்தைப் பெற்றார்.
பஞ்சாப் கிங்ஸால் ரூ.18 கோடிக்கு திரும்ப வாங்கப்பட்டார்.
டி20ஐ கிரிக்கெட்டில் புதிய பந்து மற்றும் பழைய பந்து இரண்டிலும் அர்ஷ்தீப் அற்புதமான திறமையைக் காட்டியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement