மயக்க ஊசி போட முயற்சித்த வன அதிகாரி: புலி தாக்கியதில் காயம்

திருவனந்தபுரம்: பஞ்சரக்கொல்லியில் மனித வேட்டையாடும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி நடந்தது. அப்போது புலி தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஜெயசூர்யா காயம் அடைந்துள்ளார்.


கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த ராதா என்பவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்படி வனத்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பஞ்சரக்கொல்லியில் தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான குழுவினர் முகாமிட்டுள்ளனர். புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க, 28 கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளன.

பஞ்சரக்கொல்லியில் புலி நடமாடுவதை கண்காணித்த ​​சிறப்பு மீட்பு குழு அதிகாரி ஜெயசூர்யா, அதன் மீது மயக்க மருந்து ஊசியை செலுத்தினார். அப்போது புலி, அவரை நோக்கி முன்னேறி வந்து தாக்கியது. உஷாரான ஜெயசூர்யா, தனது பாதுகாப்பு கேடயத்தைப் பயன்படுத்தி தாக்குதலைத் தடுத்தார்.



இருப்பினும், அவரது ஒரு கையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் மனந்தவாடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புலியைக் கண்டுபிடித்து பாதுகாப்பாகப் பிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. 100 வனத்துறை பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement