3ல் அமைதி ஊர்வலம்: அமைச்சர்-எம்.பி., அழைப்பு


3ல் அமைதி ஊர்வலம்: அமைச்சர்-எம்.பி., அழைப்பு


சேலம் : தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 56வது நினைவுநாளையொட்டி, பிப்., 3ல், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் அமைதி ஊர்வலம் நடக்க உள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, ஈ.வெ.ரா., சிலை பீடத்தில், காலை, 8:30க்கு புறப்படும் ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியே சென்று
அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். மாவட்ட, மாநகர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர் வட்ட, ஊராட்சி கிளை, பேரூர் வார்டு செயலர்கள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட சார்பு அணியினர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல், தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி அறிக்கையில், 'அண்ணாதுரை நினைவு தின ஊர்வலம், 3 காலை, 8:30 மணிக்கு தாரமங்கலம் நகர அலுவலகத்தில் புறப்படும். அதனால் மாவட்ட நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும்' என
கூறப்பட்டுள்ளது.

Advertisement