மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!

40

வாஷிங்டன்: ''காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.


இது குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி.

அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பல ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



ஏற்கனவே, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement