தொழிலதிபர் மகள் வீட்டில் ஈ.டி., சோதனை
சென்னை:சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தொழில் அதிபரின் மகள் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லையில், சேமியர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது தந்தை தொழில் அதிபர். போரூரில் மிகப்பெரிய மருத்துவ பல்கலையை உருவாக்கி உள்ளார். ஆண்டாள் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை விபரங்கள் எதுவும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement