நிரந்தர நீர்த்தேக்கமாகும் மாடக்குளம் கண்மாய் ரூ.17.53 கோடியில் பணிகள் துவக்கம்

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாயை நிரந்தர நீர்த்தேக்கமாக மாற்றுவதற்காக ரூ.17.53 கோடியில் கண்மாய், வரத்துக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், விவசாய சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். இத்திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.17.53 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கீழமாத்துார், துவரிமான், மாடக்குளம் கண்மாய்களின் நேரடி, மறைமுக பாசனப்பரப்பு 1456 ஏக்கர் பயன்பெறும். மாடக்குளம், பழங்காநத்தம், பொன்மேனி, எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ் நகர், முத்துப்பட்டி பகுதிகயில் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகளின் நீராதாரமும் மேம்படும்.

Advertisement