சோலைமலையில் நாளை தைப்பூச கொடியேற்றம்
அழகர்கோவில்,: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நாளை (பிப்.2) கொடியேற்றத்துடன் துவங்கி பிப்.11 வரை நடக்கிறது.
நாளை காலை 11:00 முதல் 11:30 மணிக்குள் கொடியேற்றமும், அதைதொடர்ந்து சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு யாகசாலை பூஜை,6:00 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
பிப்.3 முதல் பிப்.9 வரை தினமும் காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, 11:00 மணிக்கு உற்ஸவருக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12:30 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெறும்.
தினமும் மாலை 6:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
பிப்.10 மதியம் 12:00 மணி முதல் 12:20 மணிக்குள் தங்கத் தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 6:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிப். 11 காலை 10:35 முதல் 10:50 மணிக்குள் தீர்த்தவாரி, தைப்பூச மஹா அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:40 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.