குன்றத்து மலையில் சுனை ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார்

திருப்பரங்குன்றம்: ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரும், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான சோலை கண்ணன், மலை மேல் தர்கா அருகில் உள்ள சுனை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்ககோரியும் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணனிடம் மனு அளித்தார்.

அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலைமீது 11க்கும் மேற்பட்ட சுனைகள் உள்ளன. அனைத்தும் புனித தீர்த்தங்கள். அதில் தர்காவிற்கு கீழ்ப்பகுதியில் உள்ள சுனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். இதுவும் எதிர்காலத்தில் பெரிய சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது.

எனவே மலை மீதுள்ள அனைத்து சுனைகளையும் கோயில் நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். இதுகுறித்து கலெக்டர், தொல்லியல் துறை, ஆர்.டி.ஓ., தாசில்தார், போலீஸ் கமிஷனர், திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர், அறநிலையத்துறை கமிஷனருக்கும் புகார் அனுப்பி உள்ளேன் என்றார்.

Advertisement