சிறுதானிய உணவுத் திருவிழா

மானாமதுரை: மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளியில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.முதல்வர் லெட்சுமி முன்னிலை வகித்தார். சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

கண்காட்சியை பார்வையிட்ட பெற்றோர்கள், பொதுமக்களுக்கு குதிரைவாலி பாயாசம், முளை கட்டிய கேழ்வரகு பானம், அதிரசம்,முறுக்கு,வரகு தட்டு வடை, கடலை மிட்டாய், திணை பாயாசம் என பல்வேறு வகை உணவுகளை வழங்கினர்.

Advertisement