சிறுமிக்கு கருக்கலைப்பு போலி செவிலியருக்கு 10 ஆண்டு சிறை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலுார், நடுப்பட்டியை சேர்ந்தவர் வகினா சுல்தானா, 59. பிளஸ் 2 முடித்துள்ள இவர், செவிலியர் எனக்-கூறி, 'கிளினிக்' வைத்து மருத்துவம் பார்த்து வந்தார். 2018ல் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு, அவர்களின் பெற்-றோருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்துள்ளார்.


இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, போலீசார் வழக்-குப்பதிந்து, வகினா சுல்தானாவை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில், வகினா சுல்தானாவுக்கு, 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அப-ராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement