மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு
ஆத்துார்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன், 52. நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த நவ., 27க்கு பின், உங்கள்(சீமான்) கருத்துகள் முரணாக உள்ளன. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவருக்கு, பொதுச்செ-யலர் பதவி வழங்கியுள்ளீர்கள். பொருளாளரை எந்த காரணமு-மின்றி நீக்கிவிட்டு, 8 ஆண்டுகளாக கட்சிக்கு வராத, எதிராக இருந்தவரை பொருளாளராக நியமித்துள்ளீர்கள். கட்சியில் விதி இல்லை; விதி இல்லாததால் கட்சியினருக்கு நீதி இல்லை. நிதி-யையும் சரிவர கையாளவில்லை. உள்நாடு, வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்கின்றனர்.
நடிகர் ரஜினியை சந்திக்கும் முன், 'சங்கி என்றால் செருப்பால் அடிப்பேன்' என கூறிவிட்டு, சந்திப்புக்கு பின், 'சங்கி என்றால் சக தோழன்' என கூறியதால் அதிர்ச்சி அடைந்தேன்.
விடுதலை புலி தலைவர் பிரபாகரன் குடும்பத்தினரை திட்டிய பின், மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்களா? மாபெரும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டீர்கள். வலதுசாரி சிந்தனைகளை, தமிழகத்தில் கொண்டுவர முடியாது. வலதுசாரி வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும், தமிழ் தேசியத்-திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதால் விலகுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.