2 ஆசிரியர்கள் மீது 'போக்சோ' வழக்கு
வாழப்பாடி: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், நெய்யமலை அரசு நடுநிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர், சூலாங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார், 34. இவர் கடந்த, 14ல், தும்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 16 வயது சிறுமி-யிடம், 'நீ அழகாய் இருக்கிறாய்' என கூறி தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 29ல் ராஜ்குமார், தும்பல் பள்ளிக்கு வந்தார். அப்போது அந்த மாணவி, ராஜ்குமாரை பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் நடந்து கொண்ட விதம் குறித்து, அப்பள்ளி தமிழ் ஆசிரியர் செல்வகுமாரிடம் தெரிவித்துள்ளார். அவரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர்,
உற-வினர்கள், நேற்று முன்தினம் ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்-தனர். உடனே அங்கு வந்து, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து நேற்று அச்சிறுமி, வாழப்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், ராஜ்குமார் மட்டுமின்றி, அலட்சிய-மாக இருந்த செல்வகுமார் மீதும், 'போக்சோ' வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.