இடைப்பாடியில் மனைவியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது

சங்ககிரி: இடைப்பாடி, ஆணைபள்ளத்தை சேர்ந்தவர் பூபதி, 25. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், லாரி மெக்கானிக்காக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை, 2020ல் காதலித்தார். இரு குடும்பத்தினரும் எதிர்த்த நிலையில், அதை மீறி, சிறுமியை, பூபதி திருமணம் செய்து கொண்டார். தற்போது, 19 வயதான நிலையில், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.


அப்பெண் நேற்று முன்தினம், சங்ககிரி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் கணவர், நான் சிறுமியாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். தற்போது குழந்தை உள்ளது. இந்-நிலையில் கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சிறுமியான என்னை திருமணம் செய்த பூபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால், 'போக்சோ' வழக்குப்பதிந்த போலீசார், பூபதியை நேற்று கைது செய்தனர்.

Advertisement