கருகும் வாழைகள் அதிகாரிகள் ஆய்வு

மானாமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரை இளையான்குடி பகுதியில் கருகிய வாழை மரங்களை வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மானாமதுரை அருகே மேலநெட்டூர்,ஆலம்பச்சேரி,வேலடிமடை மற்றும் இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர், கோச்சடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் செய்த நிலையில் தற்போது போதுமான தண்ணீர் இருந்தும், உரமிட்டும் இலைகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி வருவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து மானாமதுரை,இளையான்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த வேளாண்,தோட்டக்கலை துறை அதிகாரிகள் வாழை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விளக்கங்களை கூறினர்.

Advertisement