நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள்

காரைக்குடி: காரைக்குடி அருகே நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவுகளில் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

காரைக்குடி - திருச்சி செல்லும் வழியில் பர்மா காலனி, பாரி நகர் உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தது. நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவுகளில், கடைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்காலிக கடைகளாக போடப்பட்ட இக்கடைகள் தற்போது நிரந்தர கடைகளுக்கான கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பில் உள்ள இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Advertisement