வேகத்தடையால் விபத்து அபாயம்

பேரையூர்: உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் வழியாக எம்.சுப்புலாபுரம் வரை 32 கி.மீ துாரம் உள்ள சாலையை தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிக்கின்றனர்.

இந்த ரோட்டில் பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பளிச்சென தெரியும் வகையில் வெள்ளை வண்ணம் பூசப்படவில்லை. அருகில் வரும் வரை வேகத்தடை இருப்பதே கண்ணுக்குத் தெரிவதில்லை. திடீரென தடையை பார்த்து பிரேக் போடும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக அமைக்கப்படும் வேகத்தடை விபரீதத்தை ஏற்படுத்துவதாக இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை குறித்த எச்சரிக்கை பலகை, வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

Advertisement