சீனாவில் இருந்து தான் கோவிட் தொற்று உருவானது: மீண்டும் சொல்கிறது அமெரிக்கா

1


வாஷிங்டன்: 'சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் 19 தொற்று உருவானது என்பது உறுதிப்படுத்தக் கூடிய உண்மை' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை துவம்சம் செய்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டியது. இந்த தொற்று முதலில் சீனாவில் உறுதியானது. இதனால் இந்த தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.




இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பின் போது ​​பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து தான் கோவிட் 19 தொற்று உருவானது என்பது உறுதிப்படுத்தக் கூடிய உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு கோவிட் 19 தொற்று பரவல் குறித்து விளக்கம் அளித்தார்.


அவர் கோவிட் தொற்று பரவல் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று முன்பே கூறியதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்காக அவரை பலர் கேலி செய்தனர். அவர் சதி கோட்பாடுகளை பரப்புவதாகக் கூறினர்.


அது உறுதிப்படுத்தக்கூடிய உண்மை என்று இப்போது எங்களுக்குத் தெரியும். மேலும் பைடன் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு அதைப் பற்றித் தெரியப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அவர்கள் அதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement