சோழவந்தான் வெற்றிலைக்கு தபால் உறை வெளியீடு விழா

சோழவந்தான்: சோழவந்தான் வெற்றிலைக்கு கடந்த 2023 மார்ச் 31ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

சென்னையில் நேற்று அஞ்சல் துறை சார்பில் வெற்றிலை குறியீட்டுடன் ரூ.25க்கு தபால் உறை வெளியிடப்பட்டது. முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மாள் தாமஸ் வெளியிட, மதுரை உதவி கோட்ட பொறியாளர் ரவிராஜ், சோழவந்தான் வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் சுகுமார், அருணாச்சலம், வெற்றிலை சங்க நிர்வாகி திரவியம் பெற்றுக்கொண்டனர்.

சோழவந்தான் தபால் நிலையத்தில் காணொலி காட்சி மூலம் தபால் உறை விற்பனை துவங்கப்பட்டது. உதவி கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், வெற்றிலை சங்க முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். துறை ஆய்வாளர் மணிவேல் வரவேற்றார்.

Advertisement