'கொடை'யில் இயந்திர பயன்பாடு ஜோர்

கொடைக்கானல்: - கொடைக்கானலில் தடை இயந்திர பயன்பாடுகள் தாராளமாக நடப்பதை அதிகாரிகள் துளியும் கண்டு கொள்வதில்லை.

கொடைக்கானலில் மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி போர்வெல், கம்ப்ரசர், பாறை தகர்ப்பு, மண் அள்ளும் இயந்திரம் பயன்பாடுக்கு தடை உள்ளது. ஆனால் நகர் பகுதி,மேல்மலை பகுதிகளில் இத்தகைய பயன்பாடுகள் ஜோராக நடக்கின்றன.

கண்காணிக்க வேண்டிய வருவாய் , வனத்துறை கண்டு கொள்வதில்லை. நேற்று முன் தினம் லாஸ்காட் ரோடு பகுதியில் விடிய, விடிய போர்வெல் அமைக்கும் பணி நடந்தது. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் துாக்கத்தை தொலைத்தனர். பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். இதனால் மலைப்பகுதியில் இயற்கை பேரிடர் ஆபத்து உள்ளது. இனியாவது அதிகாரிகள் கடுமை காட்ட வேண்டும்.

Advertisement