கம்பத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
கம்பம்: கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்த போதும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
நேற்று கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் ரோட்டில் ஏழரசு களம் அருகே, இரண்டு டூவீலர்களில் நின்றிருந்த நான்கு பேர்களை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 டூவீலரில் வைத்திருந்த பையில் ரூ ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். விசாரணையில் கோகிலாபுரத்தை சேர்ந்த அருண் 19, கார்த்திக் 33, கம்பத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ் 38, விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி 37 , என தெரிந்தது. நால்வரையும் கைது செய்து இரு டூவீலர்களை பறிமுதல் செய்து கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.