அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 லட்சம் மோசடி

பெரியகுளம்: தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி 35. நர்சிங் முடித்த இவரது மனைவிக்கு வேலை தேடினார்.

தங்கப்பாண்டிக்கு வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த சத்தியம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சத்தியம் ஆண்டிபட்டி , மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த நண்பர் இருளனை அறிமுகப்படுத்தினார். அங்கன்வாடியில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி தங்கப்பாண்டியிடம் ரூ.1.65 லட்சத்தை இருளன் பெற்றார். வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். பணத்தை கேட்ட தங்கப்பாண்டியை, இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-

Advertisement