தொழிலாளர் நலவாரிய பதிவு சிறப்பு முகாம்
தேனி: தொழிலாளர் நலத்துறையின் சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் கட்டடத்தில் நலவாரியங்களில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
தேனி சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி தலைமை வகித்து, பெண் குழந்தைகள்,பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கொத்தடிமைகள் மீட்பு, முதியோர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மனோஜ், ஷியாம் சங்கர், அலுவலக கண்காணிப்பாளர் இலட்சம் உள்ளிட்ட பங்கேற்றனர்.
பதிவு செய்தவர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement