புகார் பெட்டி

பஸ் நிலையத்தில் மணல் புழுதி



தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் மண் புழுதி ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கதிர், புதுச்சேரி.

சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்



வழுதாவூர் சாலையில், வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ராணி, புதுச்சேரி.

நாய்கள் தொல்லை



அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சுரேஷ், அரியாங்குப்பம்.

காந்தி வீதியில் ஆக்கிரமிப்பு



காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

விக்னேஷ், புதுச்சேரி.

Advertisement