சுவரில் நீர்க்கசிவு ஏன்... தடுப்ப து எப்படி?

எங்கள் பேரூராட்சியில், முறையான வடிகால் வசதி இல்லை. வடிகால் வெளியேற சோக்பிட்டில் கருங்கல் பயன்படுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில், கருங்கல் அல்லது ரிங் பயன்படுத்துவதில் எது சிறந்தது? ஒவ்வொன்றும் எவ்வளவு காலம் நீடிக்கும்?
-அக் ஷய ரத்னா, கோவை.
சோக்பிட்டில் கருங்கல் பயன்படுத்தக் கூடாது. ஓடை கல் பயன்படுத்தினால் சிறந்தது அல்லது ஐந்து அடி ரிங் எட்டு அடி ஆழத்துக்கு அமைத்து, அதன் பக்கப்பகுதியில் மூன்று இஞ்ச் துளை போட்டு விட வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் கூடுதல் நாட்கள், சோக்பிட் நிறையாமல் நீடிக்கும்.
நான் தற்போது வீடு கட்டி முடித்துள்ளேன். இப்போதே உட்புற சுவர்களுக்கு பட்டி பார்க்கலாமா?
-பாபு, குனியமுத்துார்.
தற்போது மார்க்கெட்டில் விற்கப்படும், சிமென்ட் பேஸ் பட்டியை உபயோகித்து, வீடு கட்டிய உடனே பட்டி பார்க்கலாம்.
நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில், காலம் போஸ்டில் இருக்கும் கம்பி வாங்கிய கலரில் இருந்து, இப்பொழுது துரு ஏறி இருப்பது போல், கலர் மாறி இருக்கிறது. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
-செல்வராஜ், ரத்தினபுரி.
இப்பொழுது சந்தையில், நிறைய கோரோஷீல்டு 'சி.ஆர்., மெட்டீரியல்ஸ்' உள்ளது. அதனை வாங்கி, நமது ஆர்.சி.சி., கான்கிரீட் போடும் இடங்களில், தண்ணீரில் கலந்து, சரியான பரிந்துரை செய்யப்பட்ட அளவில் கலந்து, பயன்படுத்தினால், மேலும் அந்த துரு வராமல் தடுக்க முடியும்.
செங்கல் கட்டடம் கட்டிய பிறகு, காலம் போஸ்ட் போடலாமா. இது சரியான முறையா?
-செந்தில், கணபதி.
செங்கல் கட்டடம் கட்டிய பிறகு, காலம் போஸ்ட் போடுவது தவறான முறை. ஏனெனில், சுவரில் இருக்கும் செங்கற்கள், கான்கிரீட்டில் இருக்கும் நீரை உறிஞ்சிக் கொள்ளும். கான்கிரீட்டில் இருக்கும் வாட்டர்- - சிமென்ட் விகிதம் மாறும்போது, கான்கிரீட்டின் உறுதித்தன்மை குறைய வாய்ப்புள்ளது. அதனால் இந்த முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உட்புற சுவர்களில் வரும் நீர்க்கசிவை, எவ்வாறு கட்டுப்படுத்துவது?
-சரவணன், காளப்பட்டி.
உட்புற சுவர்களில் நீர்க்கசிவு வருவதற்கு, பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, படுக்கை அறையில் இருக்கும், 'அட்டாச்டு டாய்லெட்'. அது சரியான முறையில் வாட்டர் புரூப் செய்யாமலும், சுவர் மற்றும் தரையில் ஒட்டப்படும் டைல்ஸ் இடைவெளியை, நன்றாக சுத்தம் செய்து பேக்கிங் செய்யாமல் இருப்பதும் காரணமாகும்.
எனவே, வாட்டர் புரூப் மற்றும் டைல்ஸ் இடைவெளியை, எபாக்ஸி கொண்டு நிரப்புவதன் மூலமாக, இப்பிரச்னையை தவிர்க்கலாம். பேஸ்மென்ட் மண் நிரப்பியவுடன், அதற்கு மேலே 'மேட் கான்கிரீட்' போடுவதன் வாயிலாக, கீழே இருந்து வரும் ஈரத்தன்மையை, கட்டுப்படுத்த முடியும்.
சமையல் மேடை எவ்வளவு உயரம், அகலத்தில் வைக்க வேண்டும்?
-பி.சத்யா, வேலாண்டிபாளையம்.
புளோர் டைல்ஸின் மேல்மட்டத்திலிருந்து, சமையல் மேடையின் அடிமட்டம், 27 இன்ச்சும், மேல் மட்டம் பினிசிங், 30 இன்ச்சும் இருக்குமாறும் அமைக்க வேண்டும். சமையல் மேடையின் அகலம் பினிசிங், 24 இன்ச்சும் இருக்க வேண்டும்.
- சுரேஷ்குமார்,
முன்னாள் தலைவர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).
மேலும்
-
கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம்
-
2 நாட்களில் ரூ.1000 உயர்ந்தது ஆபரணத் தங்கம் விலை!
-
தொகுதி மறு சீரமைப்பு; தமிழகத்துக்கு தண்டனை; விஜய் காட்டம்
-
ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு
-
சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது
-
ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்