2 நாட்களில் ரூ.1000 உயர்ந்தது ஆபரணத் தங்கம் விலை!

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ஆனால் நேற்று (மார்ச் 4) தங்கம் விலையில் மாற்றம் நிலவியது. ஒரே நாளில் சவரன் ரூ.560 அதிகரித்தது.


இந் நிலையில் நேற்றைய தினம் போலவே இன்றும் (மார்ச் 5) தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 55 உயர்ந்து ரூ.8,065 ஆக உள்ளது.


ஒரு சவரன் ரூ. 64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரன் ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement