ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: பட்ஜெட்டில் நிர்மலா அறிவிப்பு

40

புதுடில்லி: ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:




* மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு.


* வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்வு.

* ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.



2023ல் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வருமானம்- வரி விகிதம்


* ரூ.24 லட்சத்திற்கு மேல் - 30 சதவீதம்


* ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை- 25 சதவீதம்


* ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்


* ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை- 15 சதவீதம்


* ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - ரூ.5 சதவீதம்


* ரூ.4 லட்சம் வரை- வரி இல்லை.


புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பது தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவும் கிடைக்கும். இது நடுத்தர வாழ் மாத ஊதியம் பெறும் மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

பட்ஜெட்டில் திருக்குறள் சொன்ன நிர்மலா!



பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கூறுகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி”


என்ற செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறளை மோடி அரசுடன் சுட்டிகாட்டி அதன் அடிப்படையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றார். உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் மக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது என்பது குறளின் பொருள்.

Advertisement