தொலைநோக்கு திட்டங்களைக் கொண்ட பட்ஜெட்; ஒடிசா முதல்வர் புகழாரம்

புவனேஸ்வர்: மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட், தொலைநோக்கு திட்டங்களைக் கொண்டிருப்பதாக ஒடிசா முதல்வர் மோகன் சரன் மஜி தெரிவித்துள்ளார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரை வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டதற்கு ஒடிசா முதல்வர் மோகன் சரன் மஞ்சி வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரிச்சலுகை என அறிவித்திருப்பது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்டாகும்.

அனைவருக்கும் பிரகாசமான நிதி வாய்ப்புகளை வழங்க வழிவகை செய்துள்ளது, எனக் கூறினார்.

Advertisement