தைப்பூச தெப்போற்சவம்

திருக்கழுக்குன்றம்,திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தீர்த்தங்களில், பிப்., 11ம், 12ம் தேதிகளில், தைப்பூச தெப்போற்சவம் நடக்கிறது.

திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் புனித தீர்த்தமாக சங்குதீர்த்தகுளம் விளங்குகிறது.

கடலின் உவர்ப்பு நீரில் மட்டுமே தோன்றக்கூடிய சங்கு, நன்னீர் சங்குதீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது சிறப்பு. தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு, இக்குளத்தில் ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடைபெறும்.

பிப்., 11ம் தேதி மாலை, இக்குளத்திலும், மறுநாள் இரவு, பக்தவச்சலேஸ்வரர் கோவில் வளாக ரிஷப தீர்த்தகுளத்திலும், தெப்போற்சவம் நடத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement