சிவன்மலை தைப்பூச தேரோட்டத்துக்காக சன்னமரம் தயாரிக்கும் பணி தீவிரம்


சிவன்மலை தைப்பூச தேரோட்டத்துக்காக சன்னமரம் தயாரிக்கும் பணி தீவிரம்


காங்கேயம் :காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு வீரகாளியம்மன் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தேரோட்டத்தின்போது வீரகாளியம்மன் முன் தேரிலும், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் பின் தேரில் அருள்பாலித்து வருவர். பிப்.,11,12,13 ஆகிய நாட்களில் தேரோட்டம் நடைபெற உள்ளது. தற்போது தேர்களில் சக்கரம் மற்றும் மராமத்து பணி நடக்கிறது. தேரோட்டம் செல்லும் போது தேரை சரியாக செலுத்த சன்னமரம், குடில் கட்டைகள் புதிதாக செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement