சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு

புதுச்சேரி : சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரிக்கலாம்பாக்கம் சுகாதார மையம் மற்றும் ேஹாப் நிறுவனம் ஆகியன சார்பில், ஏம்பலம் மறைலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆசிரியைகள் பச்சையம் மாள், எழிலரசி, வீணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர்கள் பிரியங்கா, சுருதி ஆகியோர், 7 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், மாணவிகளுக்கு, பெண்கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில், நாயர், ஆர்யநந்தனா, பாரூக் மரைக்காயர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன், மருத்துவர்கள் மோனிகா, நல்லம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement