இரண்டு நாட்கள் குடிநீர் 'கட்'
புதுச்சேரி : மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணியால் 4ம் தேதி முருங்கப்பாக்கத்திலும், 5ம்தேதி தேங்காய்த்திட்டிலும் குடிநீர் சப்ளே தடைபடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:
முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 4ம் தேதி மதியம் 12:00 மணி மதியம் பகல் 2:00 மணி வரை முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகர், அங்காளம்மன் நகர், ரங்கசாமி நகர், பள்ளத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தடைப்படும்.
தேங்காய்த்திட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 5ம் தேதி பகல் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, தேங்காய்திட்டு, புதுநகர், தனபால் நகர், பாவேந்தர் நகர், அய்யனார் கோவில் தெரு, மேட்டுத்தெரு, வடக்குபேட், புருேஷாத்தமநாயக்கர் வீதி, மீன்பிடி துறைமுக சாலை, காளியம்மன் நகர், வெற்றி விநாயகர் நகர், சாவித்ரி அம்மாள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.