பாதயாத்திரை

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடையில் முருக பக்தர்கள் 40 பேர் நேற்று கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் கோயிலில் வழிபாடு செய்து பழநி பாதயாத்திரை சென்றனர்.

தலைமை குருசாமி காளிமுத்து மற்றும் முருக பக்தர்கள் கூறியதாவது:

நாங்கள் 62 ஆண்டுகளுக்கும் மேலாக பாதயாத்திரை சென்று வருகிறோம். இரவு தேவிபட்டினத்திலும், மறுநாள் ஆர்.எஸ். மங்கலத்திலும் தங்கி மூன்றாவது நாள் தேவகோட்டை செல்கிறோம். பிப்.,11ல் தைப்பூச விழாவில் பங்கேற்பதற்காக 7ம் நாளில் பழநி செல்கிறோம். அங்கு ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு 9ம் நாளில் சுவாமி தரிசனம் செய்கிறோம் என்றனர்.

Advertisement