2 லட்சம் வாக்காளர்களுக்கு ஈரோட்டில் 'பூத் சிலிப்' வழங்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 237 ஓட்டுச்சாவடிகளில் வரும், 5 ல், 2 லட்சத்து, 27,546 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் ஆணை யம் மூலம் 'பூத் சிலிப்' கடந்த, 26 முதல் வழங்கப்பட்டது.இது வரை, 2 லட்சத்து, 5,314 வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுவிட்டது. இது, 90.23 சதவீதமாகும். மீதமுள்ள, 22,232 வாக்காளர்கள் வீட்டில் ஆட்கள் இல்லை, வெளியூரில் வசிப்போர், முகவரி மாற்றம் செய்யாதவர்கள் போன்ற காரணத்தால் வழங்கப்



படவில்லை. இன்றும், நாளையும் இப்பணி தொடரும். மீதமுள்ள 'பூத் சிலிப்', அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடியில் வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வரும்போது கேட்டு பெற்று சென்று, ஓட்டளிக்கலாம்.

Advertisement