கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அக்னி பிரவேச உற்சவம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்பாளுக்கு அக்னி பிரவேச உற்சவம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கலச ஸ்தாபனம், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் அக்னி பிரவேசம் வைபவம் நடந்தது.
இதில் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம், தீபாராதனை நடந்தன.
விழா ஏற்பாடுகளை ஆரிய வைசிய சங்க தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் கோல்டுரவி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement