மாநில சதுரங்க போட்டிகளில் வென்ற வீரர்கள்

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பில் முன்னாள் செயலாளர் தியாகராஜன் செட்டியார் நினைவு மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்ற 396 வீரர்களில் 27 வீரர்கள் வெற்றி பெற்றனர்.

12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் செவன்த் டே மெட்ரிக் பள்ளி தானிஷ் பாண்டியன் முதலிடம், இதயம் ராஜேந்திரன் பள்ளி அதித் ஷசாங்ஸ் 2ம் இடம், ஜாஸ் பப்ளிக் பள்ளி சுகந்தாவானேஸ்வரன் 3ம் இடம், வல்லபா வித்யாலயா நவண்யா 4ம் இடம், திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஸ்ரீநாத் 5ம் இடம், ஜெயின் வித்யாலயா சி.பி.எ.ஸ்.இ., பள்ளி கமலேஷ் 6ம் இடம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி ரிதன்யா 7ம் இடம், எஸ்.பி.ஒ.ஏ. சி.பி.எஸ்.சி. பள்ளி கிருத்திகேஷ் 8ம் இடம், சங்கர நாராயண நாடார் பள்ளி நித்திஷ் 9ம் இடம், எஸ்.பி.ஓ.ஏ. சி.பி.எஸ்.இ. பள்ளி சர்வேஷ் 10ம் இடம் வென்றனர்.

மாணவியருக்கான சிறப்பு பரிசிற்கு கிரேஸ் பப்ளிக் பள்ளி மித்ரா முதலிடம், செவன்த் டே பள்ளி ராஜ பாக்ய லட்சுமி 2ம் இடம், சங்கர நாராயண நாடார் பள்ளி மகிழினி 3ம் இடம் வென்றனர்.

15 வயதிற்குட்பட்டோர் பிரிவு



டாக் சி.பி.எ.ஸ்.சி. பள்ளி கவின் பாரதி முதலிடம், கவுஷிக் 2ம் இடம், அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி கதிர்காமன் 3ம் இடம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மகராஜ் 4ம் இடம், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி அஸ்வின் 5ம் இடம், செவன்த் டே மெட்ரிக் பள்ளி டார்வின் ஜோசப் 6ம் இடம், எஸ்.பி.ஓ.ஏ. சி.பி.எஸ்.இ. பள்ளி கணேஷ் ஆதித்தன் 7ம் இடம், ஸ்ரீமீதுன் 8ம் இடம், ஜெயின் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி அகம் 9ம் இடம், வலையங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி திருமலை 10ம் இடம் வென்றனர்.

மாணவியருக்கான சிறப்பு பரிசுக்கு மகபூப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆபியா நசீம் முதலிடம், எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.சி. பள்ளி மோனிகா 2ம் இடம், அமுதினி 3ம் இடம் வென்றனர்.

சிறந்த இளைஞருக்கான பரிசை மை மதுரை மாண்டிச்சோரி பள்ளி செந்தில் பாரத் வென்றார்.

பரிசளிப்பு விழாவிற்கு முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி, முன்னாள் பொருளியல் துறை பேராசிரியர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.

உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் வரவேற்றார். மாணவர் நந்தகோபால் நன்றி கூறினார்.

Advertisement