திருவந்திபுரத்தில் 1,000 போலீசார் குவிப்பு

கடலுார் : கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. ஏ.டி.எஸ்.பி.,நல்லதுரை, டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், ராஜா, கார்த்திகேயன், சவுமியா, சபிபுல்லா, ராமதாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ்.பி., மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி.,நல்லதுரை தலைமையில், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 71சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல்படையினர் உள்ளிட்ட ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Advertisement