சென்னிமலையில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு
சென்னிமலை: சென்னிமலை சாலையில் சென்ற காரில் திடீர் என ஏற்பட்ட தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், பகுதியில் வசிப்பவர், பழனிசாமி,61; விவசாயியான இவர் வெள்ளாட்டு குட்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக காஸ் பொறுத்தப்பட்ட மாருதி ஆம்னி காரை பயன்படுத்தி ஆட்டு குட்டிகளை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சென்னி
மலைக்கு வந்தார். சென்னிமலை டவுன், அரச்சலூர் ரோடு, அண்ணமார் தியேட்டர் அருகில் கார் வந்த பொழுது காரின் அடிப்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. காரை பழனிசாமி ரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கி பார்த்தபோது தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement