தொழிலாளி மீது போக்சோ வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு சென்னிமலை சாலை முத்து குமாரசாமி வீதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் பரணிதரன்,30; கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, பரணிதரனை தேடி வருகின்றனர்.

Advertisement