கன்னியம்மன் கோவில் திருவிழா
கரூர்: சடையம்பாளையம் கன்னியம்மன் கோவில் திருவிழாவிற்காக கரகம் பாலித்து, சுற்று பகுதி பக்தர்கள், பொங்கல் வைத்து வழி-பாடு செய்தனர்.
க.பரமத்தி அருகில் சடையம்பாளையம் கன்னியம்மன் கோவிலில், தை மாதம் 2வது வெள்ளியான, 24 ல் காப்புகட்டு-தலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து, பக்தர்கள் ஊர்வ-லமாக கோவிலை வந்தடைந்தனர்.கன்னியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு ஏழு கன்னிமார்க-ளான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்-திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு இரவு முழுவதும், 7 முறை பூஜை வழிபாடு, பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜை, ஆராதனை செய்யப்பட்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை கரகம், அங்குள்ள கிணற்றில் விடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement