அரவக்குறிச்சி வடக்கு தெருவில் வீடுகளில் புகுந்த பாம்பால் பரபரப்பு




அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்தவர் குணபால், 65; ஓய்வு கிராம உதவியாளர். இவர், நேற்று காலை வீட்டில் உணவ-ருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு பின்னால், 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதைக்கண்ட குணபால், பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். பின், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலை-மையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்தில் விட்-டனர். இதேபோல், பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 39; இவ-ரது வீட்டின் மேற்கூரையில், நேற்று மதியம், 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அரவக்-குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 6 அடி நீளமுள்ள சாரைப்-பாம்பை பிடித்து வனத்தில் விட்டனர். அடுத்தடுத்த வீடுகளில், இரண்டு பாம்புகள் பிடிபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்-பட்டது.

Advertisement