குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு 600 காளை, 400 வீரர்கள் பங்கேற்பு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், காளை குத்தி துாக்கி எறிந்ததில், மாடுபிடி வீரர் ஒருவர் பலியானார்.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, வளையக்கா-ரனுார் பகுதியில், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், 9ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி, நேற்று நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி உறுதிமொழி வாசித்தார். தமி-ழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கொடிய-சைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார்.இப்போட்டியில், 600 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். வாடி வாசலில் துள்ளி குதித்து ஓடிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் விடாமல் அதன் திமிலை பிடித்து அடக்கினர். இதில், காளை முட்டி துாக்கி எறிந்ததில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆத்துார் தலைவாசல் பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், 23, என்ற மாடுபிடி வீரரின் கழுத்தில், காளையின் கொம்பு குத்தியதில் பலியானார். குமாரபா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், ஏ.டி.எஸ்.பி., சண்முகம், டி.எஸ்.பி., இமயவரம்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுரா செந்தில், தாசில்தார் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்

Advertisement