சென்னிமலையில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு..
சென்னிமலை: சென்னிமலை சாலையில் சென்ற காரில் திடீர் என ஏற்பட்ட தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், பகுதியில் வசிப்பவர், பழனிசாமி, 61; விவசாயியான இவர் வெள்ளாட்டுகுட்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக காஸ் பொறுத்-தப்பட்ட மாருதி ஆம்னி காரை பயன்படுத்தி ஆட்டு குட்டிகளை வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று காலை சென்னிமலைக்கு வந்தார். சென்னிமலை டவுன், அரச்சலூர் ரோடு, அண்ணமார் தியேட்டர் அருகில் கார் வந்த பொழுது காரின் அடிப்பகுதியில் இருந்து புகை வந்துள்-ளது. காரை பழனிசாமி ரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கி பார்த்த-வுடன் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement