மாநில வாலிபால் போட்டி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், கோட்டைமேடு பாவடி திடல் பகுதியில், எவர் கிரீன் வாலிபால் கிளப் சார்பில், ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நினைவாக, நேற்றும், இன்றும் மாநில அளவில், 13ம் ஆண்டாக, பெண்கள் வாலிபால் போட்டி நடக்கிறது.


மல்லசமுத்திரம் இ.ஓ., மூவேந்திரபாண்டியன், எஸ்.ஐ., ரஞ்சித்-குமார் போட்டியை துவக்கி வைத்தனர். முதல் பரிசு, 12,001, இரண்டாம் பரிசு, 10,001, மூன்றாம் பரிசு, 8,001, நான்காம் பரிசு, 6,001, ஐந்தாம் பரிசு, 4,001, ஆறாம் பரிசு, 2,001 ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, சேலம், திருச்சி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

Advertisement