புத்தகம் வாசிப்பதால் புதிய சொற்கள், வாக்கியங்கள் கற்றுக்கொள்ள முடியும்: அமைச்சர் மதிவேந்தன் பேச்சு
நாமக்கல்: ''புத்தகம் வாசிப்பதால் புதிய சொற்கள், வாக்கியங்களை கற்-றுக்கொள்ள முடியும்,'' என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.
நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், 3வது புத்தக திருவிழா நேற்று துவங்கி-யது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்-குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:புத்தகம் வாசிப்பதால் புதிய சொற்கள், வாக்கியங்களை கற்றுக்-கொள்ள முடியும். இதன் மூலம், நாம் பிறருடன் நல்ல முறையில் உரையாட முடியும். பொது இடங்களில் பேச நல்ல வாய்ப்பாக அமையும். நம் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிறந்த மாற்றங்களை நாம் உணர முடியும். நம்மை நாமே உயர்த்தி கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். மேலும், தமிழக முதல்வர், நாம் சந்திக்கும் நபர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்க அறிவுறுத்தினார். சிறைச்சாலை-களில் உள்ள கைதிகள் கூட புத்தகங்களை படித்து வெளி வரும் போது ஞானிகளாக வருகின்றனர். அதனால், அனைவரும் புத்தக வாசிப்பை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் வாசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை மேயர் பூபதி, தனி டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.