சென்னையில் பயணியை ஏற்றாமல் சென்ற பஸ்: நாமகிரிப்பேட்டையில் சிறைபிடிப்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கொங்கலம்மன் கோவில் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், 43; சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நாமகிரிப்-பேட்டை செல்ல, தனியார் ஆம்னி பஸ்சை, 'புக்' செய்துள்ளார். டிராவல்ஸ் நிர்வாகம், 'நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட், பிளாட்பார்ம், 10க்கு பஸ் வரும்' என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, முத்துக்குமார், இரவு, 10:00 மணிக்கு கிளாம்-பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வந்து பிளாட்பார்ம், 10ல் காத்திருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் வரவில்லை. இரவு, 2:00 மணி வரை காத்திருந்த நிலையில், 2:20 மணிக்கு முத்துக்குமார் தொலைபேசிக்கு பஸ் ஏறிவிட்டதாக, எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.


அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், மாற்று பஸ்சில் ஊருக்கு கிளம்-பினார். காலை, 8:30 மணிக்கு நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் முத்துக்குமார் இறங்கி விட்டதாக மேலும் ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. இதுகுறித்து, முத்துக்குமார் உறவினர்க-ளிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் நாமகிரிப்பேட்டைக்கு வந்த ஆம்னி பஸ்சை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பஸ் உரிமையாளர், நாமகிரிப்பேட்டைக்கு வந்தார். முத்துக்-குமார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என, கூறிய-துடன், முன்பதிவு செய்த பஸ் கட்டணத்தையும் செலுத்தி விடு-கிறோம் எனக்கூறியதை அடுத்து, உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். இதனால், நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement