ஈரோடு இடைத்தேர்தல்: தொழிலாளருக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

நாமக்கல்: 'மாவட்டத்தில் பணிபுரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு, வரும், 5ல், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்-டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும், 5ல் நடக்கிறது. இதையொட்டி, அன்று தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபு-ரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது, தனியார் நிறுவ-னங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபு-ரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், வாக்காளர்களாக பதிவு செய்துள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலா-ளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும், தேர்தல் தினத்-தன்று சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுகுறிதது புகார்கள் இருந்தால், ஈரோடு தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயலட்சுமியை, 9445398751 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement