மின் திருட்டு விவசாயி கைது
செஞ்சி : விவசாய நிலத்திற்கு மின்சாரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் கார்த்திகேயன் கடந்த 29ம் தேதி, சிறுனாம்பூண்டி கிராமத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, சிட்டாம்பூண்டியை சேர்ந்த சகாயராஜ் மகன் பிரவீன், 31, என்பவர் மின் கம்பத்தில் இருந்து தனது விவசாய நிலத்திற்கு அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியது தெரிந்தது.
இதையடுத்து, பிரவீன் மற்றும் அவருக்கு மின்சாரம் எடுக்க உதவிய திருவதிகுன்னம் கிராமத்தைச் சேர்ந்த அருள் ஆகியோர் மீது அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து பிரவீனை கைது செய்து, அருளை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement