கழுத்தை அறுத்து கொலை செய்த 5 பேர் கும்பல்

டி.கல்லுப்பட்டி, : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் 52.

இவர் அருகில் உள்ள மங்கம்மாள்பட்டிக்கு சென்று இருந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் இவர் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டனர்.

தலையை டி.கல்லுப்பட்டி- - பேரையூர் ரோட்டில் உள்ள ஒயின் ஷாப் பாரில் அருந்திய பின் அங்கே வைத்துவிட்டு தப்பிச்சென்றனர். பாரில் மது அருந்தி கொண்டிருந்த மற்றவர்கள் தலையை கண்டு அதிர்ச்சியுற்று போலீசாருக்குதெரிவித்தனர். இக்கொலையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement