சவேரியார்பட்டினம் ரோடு சேதம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடையில் இருந்து சவேரியார் பட்டினம் வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, இரட்டையூரணி, மேலமடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
இந்நிலையில் இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாததால் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி கிராமத்தினர் வாடகை வாகனங்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து பயணிக்க வேண்டிய நிலையில் அவதிக்குள்ளாகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement