விபத்து -இழப்பீடாக ரூ. 4.52 லட்சம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கூவனுாத்து குரும்பப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது 14 வயது மகன் திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

2024 பிப். ல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக விவேகானந்தாநகர் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த கார் கார்த்திக்ராஜா மீது மோதியது.

காயமடைந்த நிலையில், விபத்து தொடர்பாக வாகன விபத்துகளை விசாரிக்கும் திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயபால் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சோமசுந்தரம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.4.52 லட்சத்தை இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Advertisement